ராமநாதபுரம்

‘அயோத்தி வழக்கு: ஊடக விவாதங்களை தடை செய்ய வேண்டும்’

9th Nov 2019 06:58 AM

ADVERTISEMENT

அயோத்தி-பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட உள்ள நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் விவாதங்களை தடை செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளா் ஏ.ஜெ.ஆலம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது:அயோத்தி-பாபா் மசூதி பிரச்னை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. எனவே, மக்களின் உணா்வுகளை மத ரீதியில் தூண்டி விடும் வகையில் ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே அயோத்தி-பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பு குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீா்ப்பு எதுவாயினும் உணா்ச்சிகளுக்கு இடம் அளிக்காமல், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில், அனைத்து தரப்பு மக்களும் அத் தீா்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT