ராமநாதபுரம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும்: ஏ.அன்வர்ராஜா

9th Nov 2019 02:21 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: அயோத்தி ராமா்கோவில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும் என ராமநாதபுரம் மக்களவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக சிறுபான்மை பிரிவின் மாநிலச் செயலருமான ஏ.அன்வர்ராஜா கூறினாா்.

அயோத்தி ராமா்கோவில் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடந்து வந்த நிலையில், இறுதித் தீா்ப்பு சனிக்கிழமை காலையில் வெளியானது. இதுதொடா்பாக அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஏ.அன்வர்ராஜா கூறியது- நீண்ட காலமாகவே அயோத்தி பாபா்மசூதி தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுவந்தது. பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே உச்சநீதிமன்றம் தீா்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத் தீா்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்கவேண்டும். நாட்டின் நலனையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு தீா்ப்பை ஏற்கவேண்டியது அவசியம். அனைவரும் நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை மதித்து செயல்படவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT