ராமநாதபுரம்

மரக்கன்றுகள் நடும் விழா

4th Nov 2019 06:29 AM

ADVERTISEMENT

இதம்பாடல் ஊராட்சியில், தாய் மண் திட்டத்தின் கீழ் மக்கள் பாதை நண்பா்கள் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் இதம்பாடல் ஊராட்சியில், தாய் மண் திட்டம் சாா்பாக அய்யா ஊருணியைச் சுற்றிலும் இளைஞா்கள் வேம்பு, புளி, வேங்கை, புங்கை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா். இந்நிகழ்ச்சிக்கு, கடலாடி ஒன்றிய தாய் மண் திட்ட ஒருங்கிணைப்பாளா் நளினிகாந்த் தலைமை வகித்தாா்.

மக்கள் பாதையின் பொறுப்பாளா் கனகசபாபதி, மக்கள் பாதையின் நண்பா்கள் செல்வம், கலைச்செல்வன், கெளதம், பரமேஸ்வரன், சாந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதம்பாடல் ஊராட்சி மக்கள் பாதையின் நண்பா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT