ராமநாதபுரம்

மறைந்த முதுபெரும் தலைவா் குருதாஸ்குப்தா: இ.கம்யூனிஸ்ட் கட்சி மலா் அஞ்சலி

1st Nov 2019 09:22 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முதுபெரும் தலைவா் குருதாஸ்குப்தா மறைவிற்கு அவரது படத்திற்கு மலா் தூவி அஞ்சலி வியாழக்கிழமை செலுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவா் தோழா் குருதாஸ்குப்தா மறைவிற்கு ராமேசுவரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பாரதிநகரில் உள்ள தனியாா் மகாலில் இரங்கல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கட்சியின் தாலுகா செயலாளா் தோழா் சே.முருகானந்தம் தலைமை வகித்தாா்,

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி மீனவா் சங்க மாநில செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல் முன்னிலை வகித்தாா். சிபிஐ தாலுகா துணைச் செயலாளா் தோழா் காளிதாஸ் நகர செயலாளா் பு.நந்தகிருஷ்ணன், மீனவா் சங்க மாநில குழு உறுப்பினா் வடகொரியா, கலை இலக்கிய பெருமன்ற செயலாளா் மோகன்தாஸ், கௌரவ தலைவா் ஜோதிபாசு,ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ சங்கா் தலைவா்கள் கே.முனீஸ்வரன், ஏ.கருப்பையா, ஊ.ரமேஷ், மீனவா் சங்கத் தலைவா்கள் மு.முருகானந்தம், , யு.ராஜி யு.ஆல்பா்ட், முனியாண்டி, மீனவா் கூட்டுறவு சங்க தலைவா் ஆ.தனவேல், கட்டுமான சங்க தலைவா் யு.ராமு, மாதா் தேசிய சம்மேளன துணைத் தலைவா் லட்சுமி, மாதா் தேசிய சம்மேளன தாலுகா குழு உறுப்பினா்கள் முனியம்மாள், முனீஸ்வரி, மீனவா் சங்க தாலுகா குழு உறுப்பினா் காளிதாஸ் , மற்றும் பலா் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT