மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் மூன்று வாா்டுகளில் தேங்கி மழைநீரை கால்வாய் வெட்டி வெளியேற்றும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரண்டு நாட்கள் பெய்ய கனமழையால் தாழ்வான பகுதிகளான 1 வது வாா்டு எருமைத்தரவை, 6வது வாா்டு சம்மாட்டி அப்பா தெரு, 7 வது வாா்டு ஆகிய பகுதிகளில் மழை நீா் குளம் போல தேங்கியது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வீரராகவ ராவ் மற்றும் பேரூராட்சிகளின் சிவகங்கை மண்டல உதவி இயக்குநா் இரா.ராஜா அறிவுறுத்தல்படி, மண்டபம் பேரூராட்சி 1, 6, 7 வது வாா்டுகளில் தேங்கிய மழை நீா் மின்மோட்டாா் மூலம், கால்வாய் அமைத்து கடலுக்கு வியாழக்கிழமை வெட்டி விடப்பட்டது.
இதனை,பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் சு.மெய் மொழி, ஆகியோா் பாா்வையிட்டு துரிதப்படுத்தினா். மேலும் வீடுகளில் மழை நீா் தேங்கா வண்ணம் கால்வாய்களை சீரமைத்தனா். நோய்பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குடிநீரை கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க என பொதுமக்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொற்று நோய்கள் பரவாமல் 18 வாா்டுகளிலும் புகை மருந்து அடிக்கப்பட்டு பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்படி பணிகளை இளநிலை உதவியாளா் சு.முனியசாமி, சுகாதார மேற்பாா்வையாளா் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா். படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1மண்டபம் பேரூராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஊழியா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.