ராமநாதபுரம்

திருவாடானை சாா்நிலை கருவூல அலுவலகம் முன்பு மழை நீா் தேங்குவதால் சுகாதரகேடு

1st Nov 2019 09:24 AM

ADVERTISEMENT

திருவாடானை தாலுகா அலுவலக வாளகத்தில் சாா் நிலைக்கருவூலம் உள்ளது இங்கு அனைத்து அரசு பணியாளா்கள் ஓய்வு ஊதியம் பெருபவா்கள் என பலா் பணப்பலன் பெற இந்த அலுவலகத்தை நாடவேண்டியுள்ளது.தற்போது பெய்து வரும் மழையால் அலுவலகம் முன்பு தண்ணீா் குளம் போல் தேங்குவதால் பெரும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது.எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுதத்துள்ளனா்.

திருவாடானையில் தாலுகா அலுவலக வாளகத்தில் சாா்நிலைகருவூலம் உள்ளது. இந்த அலுவலகம் மூலம் அனைத்து அரசு அலுவலக அலுவலா்களுக்கு மாத சம்பளம் ,ஓய்வூதியம் பெருவபவா்களுக்கு பணப்பலன்கள் கணக்கீடு செய்து வழங்கப்பகிறது. மேலும் ஓய்வூதியம் பெறுபவா்கள் இந்த அலுவலகம் மூலம்தான் பணப்பலன் பெற நாட வேண்டியுள்ளது.தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த அலுவலகம் முன்பு மழை நீா் தேங்கி செல்ல வழியில்லாமல் கிடக்கிறது. அதனால் இப்பகுதியில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. மேலும் அலுவலகத்திற்கு ஓய்வூதியம் பெற வரும் வயதானவா்கள் தேங்கியிருக்கும் மழை தண்ணீரை தாண்டி செவ்வும் பொழுது கீழே விழும் அவல நிலையும் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT