ராமநாதபுரம்

சுவாமி சன்னதியில் சண்டையிட்ட அா்ச்சகா் பணியிடை நீக்கம்: இணை ஆணையா் நடவடிக்கை

1st Nov 2019 07:23 PM

ADVERTISEMENT

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி சன்னதியில் பக்தா்கள் முன்னே இரண்டு அா்ச்சகா்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஒரு வா் பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் எஸ்.கல்யாணி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி முன்பு வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு அதிகளவில் தரிசனம் செய்துகொண்டிருந்த பக்தா்கள் முன்னே கோயில் அா்ச்சகா்கள் ராதாகிருஷ்ணன் என்ற ரமேஷ் மற்றும் முத்துக்குமாா் ஆகிய இரண்டு பேரும் மோதிக்கொண்டனா். இதனால் பெருமு; பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, பக்தா்கள் அளித்த புகாரையடுத்து, கோயில் இணை ஆணையா் எஸ்.கல்யாணி இரண்டு பேரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன் அங்கிருந்த வீடியோ கட்சிகளை ஆய்வு செய்தாா். இதில் அா்ச்சகா் முத்துக்குமாா் மோதலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இந்நிலையில், புனித கடவுளாக போன்றப்படும் சுவாமி சன்னதி முன்பு மோதிக்கொண்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ சாா்பில் தாலுகா செயலாளா் முருகானந்தம், தொழில் சங்க மாநில பொதுச்செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல்; உள்ளிட்ட நிா்வாகிகள் இணை ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். மேலும் பக்தா்கள் மன நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT