ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் சார்பில் 35 மாணவர்களும், 26 மாணவியரும் என மொத்தம் 61 பேர் எழுதினர். இதில், 34 மாணவர்கள், 26 மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் தேர்ச்சி 98.36 சதவீதமாகும்.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 1,963 மாணவர்களும், 1,936 மாணவியரும் எழுதியதில் 1,903 மாணவர்களும், 1,907 மாணவியரும் என மொத்தம் 3,810 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது, 97.72 சதவீதமாகும்.
அரசுப் பள்ளிகளில் 2,761 மாணவர்களும், 2,996 மாணவியரும் தேர்வெழுயதில் 2,704 மாணவர்களும், 2,953 மாணவியரும் என 5,657 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி 98.26  சதவீத தேர்ச்சியை அரசுப் பள்ளிகள் பெற்றுள்ளன. இதில், மாணவியர் 98.66 சதவீதமும், மாணவர்கள் 97.94 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
அறநிலையங்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் 157 மாணவியர் தேர்வெழுதியதில் 152 பேர் (98.82 சதவீதம் ) தேர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சிப் பள்ளிகளில் 97.18 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 
பகுதி நேர அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,233 மாணவர்களும், 1,218 மாணவியரும் தேர்வெழுதியதில் 1,207 மாணவர்களும், 1,203 மாணவியரும் (97.89 சதவீதம்) தேர்ச்சியடைந்துள்ளனர். 
சுயநிதி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலிருந்து 2,025 மாணவர்களும், 1,809 மாணவியரும் தேர்வெழுதியதில் 2,010 மாணவர்களும், 1,807 மாணவியரும் (99.89 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். சுயநிதி டிஎஸ்சி பிரிவு பள்ளிகளிலிருந்து 223 மாணவரும், 172 மாணவியரும் தேர்வெழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
மாவட்டத்தில் மொத்தம் 178 பள்ளிகள் முழுத் தேர்ச்சியையும், 8 பள்ளிகள் 99 சதவீதமும், 15 பள்ளிகள் 98 சதவீதமும், 15 பள்ளிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், மாவட்டத்தில் இரு பள்ளிகள் மட்டுமே மிகவும் குறைந்து 78 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com