பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் மானிய விலை டீசல் வழங்காததைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்றது.
ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசல் 1,500 லிட்டர், தடைகாலம் முடிவடைந்தும் மீன்வளத்துறையினர் வழங்கவில்லை. உடனே மானிய விலை டீசல் வழங்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர். போராட்டம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதனால் ரூ.1 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் 3 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர். தமிழக அரசு உடனே மானிய விலை டீசல் வழங்க வேண்டும் என மீனவ மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.