ராமநாதபுரம்

பரமக்குடியில் ஓய்வூதியர் சங்க 3-ஆவது வட்ட மாநாடு

31st Jul 2019 07:52 AM

ADVERTISEMENT

பரமக்குடியில் அனைத்து அரசுத்துறை ஓய்வூதியர்கள் சங்க 3-ஆவது வட்ட மாநாடு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இம்மாநாட்டிற்கு வட்டத் தலைவர் வி.இருளப்பன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை மண்டலச் செயலாளர் பவுல்ராஜ் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். வட்டச் செயலாளர் முருகேசன் ஆண்டறிக்கையினையும், பொருளாளர் வியாசமூர்த்தி வரவு, செலவு அறிக்கையினையும் தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கதிரேசன், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக வி.இருளப்பன், செயலாளராக முருகேசன், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவராக தட்சிணாமூர்த்தி , இணைச் செயலாளராக வியாசமூர்த்தி உள்பட சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக துணைத் தலைவர் தட்சிணா மூர்த்தி வரவேற்றார். 
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பரமக்குடி நகராட்சியில் பாதாளச்  சாக்கடைத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் கருப்பையா நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT