ராமநாதபுரம்

தொருவளூர் ஊருணியில் விதி மீறி மீன் பிடித்ததாகப் புகார்: ஊராட்சிச் செயலர் மீது நடவடிக்கை

31st Jul 2019 07:44 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரில் விதி மீறி மீன் பிடித்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
தொருவளூரில் உள்ள ஊருணியில் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி தண்ணீரை வெளியேற்றி விதி மீறி மீன் பிடித்ததாகப் புகார் எழுந்தது. அங்குள்ள ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களைப் பிடித்துள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக   வட்டாட்சியர் விசாரணை நடத்தி,  ராமநாதபுரம் கோட்டாட்சியர்  ஆர்.சுமனிடம்  அறிக்கையை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் அவர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாஸுக்கு, தொருவளூர் ஊராட்சிச் செயலர் மீது நடவடிக்கை எடுத்து அதை அறிக்கையாக அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாஸ் கூறியது: கோட்டாட்சியர் உத்தரவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT