ராமநாதபுரம்

அரசுப் பேருந்து இருக்கைகள் சேதம்: பள்ளி மாணவர்கள் மீது புகார்

31st Jul 2019 07:54 AM

ADVERTISEMENT

கமுதி வழியாக பெருநாழி செல்லும் அரசுப் பேருந்தின் இருக்கைகளை சேதப்படுத்திய பள்ளி மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
கமுதியிலிருந்து செங்கப்படை, புதுக்கோட்டை, நெறுஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, கோவிலாங்குளம் வழியாக பெருநாழிக்கு  4 ஆம் எண் அரசு நகர பேருந்து இயக்கபடுகிறது. இப்பேருந்து பள்ளி மாணவர்களின் வசதிக்காக காலை 7 மணிக்கு கமுதியில் புறப்பட்டு பெருநாழி சென்று, 9 மணிக்கு மீண்டும் கமுதிக்கு வருவது வழக்கம். 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் பெருநாழி சென்று கமுதி திரும்பும் போது தோப்படைப்பட்டி, நெறுஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இருக்கைகளை சேதப்படுத்தி, அதனை பயணிகள் மீது மழை போல் தூவி  அத்து மீறி நடந்ததாக கூறப்படுகிறது.
 இதனையடுத்து கமுதி போக்குவரத்து கிளை மேலாளர் தனபால் கமுதி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். 
அதன் பேரில் கமுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
இதுகுறித்து கமுதி போக்குவரத்து கிளை மேளாளர் தனபால் கூறியது: பொதுமக்களுக்கும், பயணிகளுக்கம் அச்சம் ஏற்படும் வகையில் ஒழுங்கீனமாகவும், படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது போலீஸார் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT