முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளம் கண்மாய் பகுதியில் திங்கள்கிழமை விளையாடிய 2 மாணவர்கள் வெடி வெடித்ததில் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சூர்யா (8), செந்தில் மகன் வினித் (8) ஆகிய இருவரும் 3 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் வீட்டில் வைத்திருந்த வெடியை அப்பகுதி கண்மாய்க்குள் எடுத்துச் சென்று வெடிக்கச்செய்துள்ளனர். அப்போது இருவரின் முகம் மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து முதுகுளத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.