ராமநாதபுரம்

கல்வித் துறை பணியாளர்களுக்கு இன்று இடமாறுதல் கலந்தாய்வு

29th Jul 2019 09:06 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.
இந்த கலந்தாய்வு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கண்காணிப்பாளர்கள் 2 பேர், உதவியாளர்கள் 8 பேர், இளநிலை உதவியாளர்கள் 3 பேர் மற்றும் தட்டச்சர் 6 பேர் என 19 பேர் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ளனர். 
அவர்களில் 16 பேர் உள் மாவட்ட அளவிலும், 3 பேர் வெளிமாவட்ட அளவிலும் இடமாறுதல் பெற வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 
வேலூரில் மக்களவைத் தேர்தல் நடத்தப்படுவதால், அந்த மாவட்டத்தைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதாகவும் கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT