ராமநாதபுரம்

திருப்புல்லாணி அரசுப் பள்ளியில்  "கல்வெட்டு அறிவோம்' பயிலரங்கம்

27th Jul 2019 07:59 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் "கல்வெட்டுகள் அறிவோம்' என்ற தலைப்பிலான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் செயலர் வே.ராஜகுரு தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக திருப்புல்லாணி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி பங்கேற்றார்.  
கல்வெட்டுகளில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், எண்கள் ஆகியவற்றின் நூற்றாண்டு வளர்ச்சி குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் 8 ஆம் வகுப்பு மாணவிகள் வி.டோனிகா, க.அபிராமி, மு.பிரவீணா ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும், ஏழாம் வகுப்பு மாணவிகள் ச.பிரியதர்ஷினி, ஜீ.ஹரிதா ஜீவா ஆகியோர்  கல்வெட்டுகளின் அமைப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர் த.முகம்மது பாசில் கல்வெட்டு சொற்கள் பற்றியும் உரையாற்றினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகளை மாணவர்கள் பார்த்து படித்தறிந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT