ராமநாதபுரம்

துபையில் வேலைக்கு சென்ற கமுதி இளைஞர் மாயம்: உறவினர்கள் தவிப்பு

22nd Jul 2019 09:32 AM

ADVERTISEMENT

துபையில் வேலைக்குச் சென்ற, கமுதி இளைஞரை கடந்த 4 மாதங்களாக தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர்.
கமுதி அருகே காடமங்கலத்தை சேர்ந்தவர்சுப்புராமு. இவர் பெருநாழியில் வசித்து வருகிறார். இவரது  மகன் செல்வக்குமார் (29). இவருக்கும், இவரது உறவினர் பெண்ணான புவனேஸ்வரிக்கும் திருமணம் முடிந்து, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. 
ஓராண்டுக்கு முன் துபையில் கூலி வேலைக்காக செல்வக்குமார் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் சம்பள பணத்தையும் அனுப்பி வந்துள்ளார். 
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக செல்வக்குமார், தனது குடும்பத்தினருடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் உள்ளார். அவர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து துபை தூதரகத்திலும் புகார் அளித்துள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு செல்வக்குமாரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனேஸ்வரி மற்றும்  உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT