ராமநாதபுரம்

காத்தாகுளம் கருங்காளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

15th Jul 2019 07:31 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கருங்காளி அம்மன் கோயில், செண்பூ கூத்த அய்யனார் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு அனுக்ஞை, லெட்சுமி பூஜை, விநாயகர் வழிபாடு, கோமாதா பூஜை,  61 பந்தி 21 பரிவார தேவதைகளுக்கும் 11 மணிக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் வருஷாபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து கருங்காளி அம்மன், செண்பூ கூத்த அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவுக்கு கிராம தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ், காவல் ஆய்வாளர் எஸ்.வடிவேல் முருகன், கிராம நிர்வாக கமிட்டி பொறுப்பாளர்கள் எஸ்.ராமலிங்கம், என்.மலைச்சாமி, வி.கந்தசாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT