ராமநாதபுரம்

ராமேசுவரம் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: முதல் நாளில் 15 பேருக்கு விண்ணப்பம்

12th Jul 2019 09:29 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை தொடங்கியதை அடுத்து, 15 மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
      ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள இக்கல்லூரிக்கான அலுவலகத்தில் தொடங்கியது.      ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி முதல்வர் மகுதம்மாள், விண்ணப்பப் படிவங்களை வழங்கி, மாணவர் சேர்க்கையை தொடக்கி வைத்தார். 
    இந்த நிகழ்ச்சியில், இக் கல்லூரி முதல்வர் நாகராஜன், ராமநாதபுரம் அரசு கல்லூரி பேராசிரியர் ராமகிருஷ்ணன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சந்தானவேலு, நுகர்வோர் பாதுகாப்பு  இயக்க செயலர் களஞ்சியம் உள்பட பலர் பங்கேற்றனர். 
     இதில், மாணவ-மாணவியர் என 15 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. மேலும், திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெறும் என, கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT