ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகரில் ஜூலை 12 மின்தடை

12th Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகரில் நான்குவழிச் சாலைப் பணிக்காக மின்கம்பங்கள் அகற்றப்பட உள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
       இது குறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் கங்காதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தேசிய நெடுஞ்சாலை மத்திய சாலை திட்டத்தின் கீழ், இரு வழிச் சாலையை நான்குவழிச் சாலையாக (அச்சுந்தன் வயல் முதல் ஈசிஆர் சந்திப்பு வரை) அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு, இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது.     எனவே, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை ராமநாதபுரம் நகரில் நாகநாதபுரம், கான்சாகிப் தெரு, கருவேப்பிலைக்கார தெரு, வைகை நகர், சத்திர தெரு, பேராவூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT