ராமநாதபுரம்

10  ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று ஜூலை 10 முதல் பள்ளிகளில் பெறலாம்

6th Jul 2019 08:58 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்கள் அசல் மதிப்பெண் சான்றுகளை இம்மாதம் 10 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச்சில் (2019) 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வரும் 10 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் அசல் மதிப்பெண் சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கே சென்று பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT