கமுதியில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற கிராம உதவியாளரை தாக்கியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கமுதி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் வேல்முருகன் (42). இவர் கமுதி நகர கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கமுதி குண்டாறு பகுதியில் சாக்குப் பைகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக வேல்முருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குண்டாறு பகுதிக்கு சென்று சோதனையிட்ட போது மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.
பின்னர் வேல்முருகன் வீட்டுக்கு திரும்பி வரும் போது மணல் திருட்டில் ஈடுபட்ட உடைகுளத்தை சேர்ந்த மூக்கையன் மகன் அய்யனார் (40) வேல்முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதனையடுத்து வேல்முருகன் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அய்யனாரை கைது செய்தனர்.