ராமநாதபுரம்

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்:  3 பேர் மீது வழக்கு

4th Jul 2019 07:56 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேத்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி பிரேமா (38). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காந்தி என்பவருக்கும் இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பிரேமாவை அதே ஊரைச் சேர்ந்த காந்தி, இவரது மனைவி இந்திரா, உறவினர் பாப்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரேமா புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் காந்தி, இந்திரா, பாப்பா ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT