ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் குடிநீர் திருட்டு: 37 மின் மோட்டார்கள் பறிமுதல்

2nd Jul 2019 06:59 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் நகராட்சியில் குடிநீர் திருட்டுக்கு பயன்படுத்தி வந்த 37 மின் மோட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  ராமேசுவரத்தில் காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் மற்றும் நகராட்சி குடிநீர் திட்டத்தின் மூலம் நான்கு நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் போதிய அளவுக்கு குடிநீர் வரவில்லை என்றும், மோட்டார் பொருத்தி குடிநீர் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். 
   இந்நிலையில், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் உத்தரவின் பேரில், குடிநீர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களைக் கண்டறிந்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பொறியாளர் அய்யனார் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
 இதில், வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது வரையில் 37 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொறியாளர் அய்யனார் திங்கள்கிழமை தெரிவித்தார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT