ராமநாதபுரம்

திருவாடானை அருகே திரு இருதய ஆலய தேர் பவனி

2nd Jul 2019 07:03 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகேயுள்ள இருதயபுரத்தில் திரு இருதய ஆலய தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 
 இத்திருவிழா கடந்த ஜூன் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத் தந்தை அம்புரோஸ் தலைமை வகித்தார். அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு சிறப்பு திருப்பலி ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட  ஒரு தேரில் திரு இருதய ஆண்டவரும், மற்றொரு தேரில் தேவ மாதாவும் எழுந்தருளி அருள்பாலித்தனர். தேர்கள் ஆலயத்தை வலம் வந்தன. பங்குத் தந்தையர்கள் மூலம் சிறப்பு திருப்பலி ஆராதனைகள் நடத்தப்பட்டன. விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT