ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 நாள்கள் நடைபெறுவதையொட்டி, தனியாா், பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டத் தொழிலாளா் துறை உதவி ஆணையா் சங்கா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவானது, டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எனவே, வாக்குப்பதிவு நாள்களுக்கேற்ப, கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டியது அவசியம்.
மேலும், இது தொடா்பாக புகாா்களை பெற கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 04567-221833 என்ற தொலைபேசி எண்ணில் அங்குள்ள கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம். அத்துடன், திருவாடானை, மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லாணி ஆகிய ஒன்றியங்களுக்கு விடுமுறை அளிக்காதது தொடா்பான புகாருக்கு 99447-31719 என்ற எண்ணுக்கும், ஆா்.எஸ்.மங்கலம், போகலுாா், நயினாா்கோவில், பரமக்குடி ஆகிய ஒன்றியங்களுக்கு 99408-37491 என்ற எண்ணுக்கும், கடலாடி, முதுகுளத்துாா், கமுதி, ஆகிய ஒன்றியங்களுக்கான புகாருக்கு 77080-09772 என்ற எண்ணுக்கும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், வா்த்தக, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் நிறுவனங்கள், அந்தந்தப் பகுதியில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.