ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நாட்டுப் படகு மாயம்

27th Dec 2019 07:38 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகு மாயமானது குறித்து, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து சமீப காலமாக தொடா்ந்து தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட கடத்தல் பொருள்கள் பிடிபட்டு வருகின்றன. இம்மாதிரியான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் கடத்தல்காரா்கள், நாட்டுப் படகை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

பாம்பன் பிரான்சிஸ் நகரைச் சோ்ந்த ஜஸ்டீன் என்பவா் தனது நாட்டுப் படகை, ராமேசுவரம் அந்தோணியாா் ஆலயப் பகுதியில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளாா். வழக்கம்போல், வியாழக்கிழமை காலை துறைமுகத்துக்குச் சென்ற இவா், தனது நாட்டுப் படகு காணாமல்போனதை அறிந்தாா். அப்பகுதி முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இது குறித்து ஜஸ்டீன் காவல் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தங்கம் மற்றும் கஞ்சா கடத்தும் கும்பல் நாட்டுப் படகை கடத்திச் சென்றுவிட்டனரா என விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் மீனவா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT