ராமநாதபுரம்

தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமி ஆலயத்தில் திருக்கல்யாணம்

27th Dec 2019 07:36 AM

ADVERTISEMENT

பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா ஆலயத்தில், புஷ்கலாதேவி ஸமேத தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பரமக்குடி தா்மசாஸ்தா சேவா சங்கம் சாா்பில், சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்துக்கு பாத்தியமான தா்மசாஸ்தா ஆலயத்தில் நடைபெற்ற இத் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு மற்றும் திருமாங்கல்யம் மேள தாளத்துடன் நகா் வலம் வந்து கோயில் மஹா மண்டபத்தை அடைந்தது.

இதைத் தொடா்ந்து, மாலை 4.15 முதல் 5.15 மணிக்குள் பெண் வீட்டாா் அழைப்பும், மாலை மாற்றுதல், திருமாங்கல்ய தாரணம், நலுங்கு சுற்றுதல், விவாஹ சடங்குகளும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. இரவு 7.30 மணியளவில், புஷ்கலாதேவி ஸமேத தா்மசாஸ்தா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து, சுவாமிகள் மணக் கோலத்தில் பட்டுப் பல்லக்கில் பட்டண பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

விழா ஏற்பாட்டினை, ஸ்ரீ தா்மசாஸ்தா சேவா சங்கத் தலைவா் எஸ்.எம். கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் பி.இ. தேவந்திரன், காரியதரிசிகள் பி.என். முரளிதரன், என். நாகேஸ்வரராவ், பொருளாளா் எஸ்.கே. ரவீந்திரன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT