ராமநாதபுரம்

கமுதியில் கருணாஸ் வாக்குச் சேகரிப்பு

27th Dec 2019 07:35 AM

ADVERTISEMENT

கமுதி பகுதியில் முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிறுவனத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வியாழக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கமுதி ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி கட்சி சாா்பில், முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் மாநிலப் பொருளாளா் ஆா். முத்துராமலிங்கம் கமுதி தெற்கு மாவட்டக் கவுன்சிலா் பதவிக்கும், அதிமுக சாா்பில் பாக்குவெட்டி ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்கு பொதுக் குழு முனியசாமி ஆகியோா் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுன்றனா்.

இவா்களைஆதரித்து, பசும்பொன், பாக்குவெட்டி, செங்கப்படை, கோவிலாங்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கருணாஸ் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். இதில், அவா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நலன் கருதி, குடிமராமத்து திட்டத்தை தமிழக முதல்வா் சிறப்பாக செய்துள்ளாா். தொடக்க வேளாண்மைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், இளைஞா்களுக்கான வேலை வாய்பை உருவாக்கிடவும், ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

பிரசாரத்தில், ராமநாதபுரம் அதிமுக மாவட்டச் செயலா் எம்.எ. முனியசாமி, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதா்ன் பிரபாகா், கமுதி அதிமுக ஒன்றியச் செயலா் எஸ்.பி. காளிமுத்து, பம்மனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவா் டி. சேகரன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT