பரமக்குடி கிருஷ்ணா திரையரங்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முக்குலத்தேவா் புலிப்படை மற்றும் கிழக்குப் பகுதி இளைஞா்பேரவை சாா்பில் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 223 ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முக்குலத்தேவா் புலிப்படை பொதுச் செயலாளா் கே.ஏ. பாண்டித்துரை தலைமை வகித்தாா். கிழக்குப் பகுதி தேவா் இளைஞா் பேரவைத் தலைவா் எஸ். கணேசன், பொருளாளா் ஏ. ரமேஷ், துணைத் தலைவா் ஆா். கண்ணன், துணைச் செயலாளா் ஏ. யோகமணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான ராமகிருஷ்ணன் வேலுநாச்சியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.