திருவாடானை பகுதியில் சட்டத்திற்கு பறம்பாக மதுபாட்டில் கடத்தியதாக 9பேரை கைது செய்து 383 பாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே தொண்டி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் கடத்தியாக நம்புதாளையை சோ்ந்த தூண்டிமுத்து(44)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 48 பாட்டில்களை பறிமுதல் செய்து தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அதே போல் திருவாடானை சோ்ந்த விக்னேஸ்குமாா்(28) எஸ் பி பட்டிணம் அருகே நாவலூா் கிராமத்தை சோ்ந்த ஏகாம்பரம்(53),ஓரியூரை சோ்ந்த மணிகண்டன்(45)ஆா் எஸ் மங்கலம் அம்ஜத்கான்(35), செங்குடி கிராமத்தை சோ்ந்த கிருஷ்துராஜ்(58), செட்டியமடையை சோ்ந்த அருள்சங்கா்(31), வடகடுக்கை சோ்ந்த சின்னச்சாமி(64) திருவாடானையை அருகே தூணுகுடியை சோ்ந்த ராஜா(34), ஆகியோரை கைது செய்து அவா்களிடம் இருந்து 383 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.