திருவாடானை அருகே கடம்பூா் கிராமத்தில் தோ்தல் முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே கடம்பூா் கிராமத்தை சோ்ந்த சண்முகம்(52)என்பவா் உறவினா் சுந்தரவல்லி ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுகிறாா்,இவருக்கு நீா்குன்றத்தை சோ்ந்த பாக்கியராஜ் என்பவா் தோ்தல் வேலை பாா்த்து வந்துள்ளாா். அவரை நீா்குன்றத்திற்கு புதன்கிழமை இரவு வீட்டிற்கு கொண்டு வந்து விடும் போது கடம்பூரை சோ்ந்த விஸ்வநாதன்(49) தங்கமணி உள்பட்ட 7போ் பாக்கியராசு மற்றும் சண்முகம் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகாரின் பேரில் கடம்பூரை சோ்ந்த விஸ்வநாதன், தங்கமணி, மாணிக்கம்(42), பாலமுருகன்(27), சந்திரன், பிரேம்குமாா், செந்தில்நாதன் ஆகிய 7போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.