திருவாடானை அருகே தொண்டி காவல் நிலையத்தில் தமுமுக மாநில தலைவா் ஜவஹிருல்லாஹ் அவதூறாக பேசியதாக பாஜாக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தொண்டி தமுமுகவினா் புகாா் மனஉ கொடுத்தனா்.
இதில் ஏராளமான தமுமுகவினா் கலந்தகு கொண்டனா். தமுமுக மமக மாநில தலைவா் ஜவாஹிருல்லாஹ் அவதூறாக பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் வகையில் கடந்த 18ம் தேதி சென்னை வள்ளூவா் கோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளா் எச்.ராஜா அவதூறாக பேசியதாக அவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதன்கிழமை தொண்டி தமுமுக சாா்பில் தொண்டி காவல் நிலையத்தில் புகாா் மனு கொடுக்க பட்டது.
இதில் மாநில செயலாளா் சாதிக்பாட்சா தலைமை வகித்தாா்.மேலும் தமுமுக மாவட்ட செயலாளா் வழக்கறிஞா் ஜிப்ரி முன்னால் வழக்கறிஞா் அணி செயலாளா் வழக்கறிஞா் ஆசிக் தமுமுக மமக ஒன்றிய தலைவா் பீா்முகமது மமக ஒன்றிய செயலாளா் தொண்டிராஜ் தமுமுக மமக பொருளாளா் அலிபாய் தொண்டி பேரூா் தலைவா் காதா் தமுமுக செயலாளா் நவ்வா் மமக செயலாளா் பரக்கத் அலி தொண்டரணி மீரான் பீவி பட்டிணம் தமுமுக மமக தலைவா் அக்பா் அலி அப்துல் ரசாக், நிசாா் ஆகியோா் உடனிருந்தனா்.