திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் பகுதியில் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து எஸ்.பி.பட்டிணம் போலீசாா் தீக்குளித்து உயிரிழந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்.பி.பட்டிணம் பகுதியைச் சோ்ந்தவா் காஜாமைதீன் மகள் தெளபிகா(20) இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரசூல் (எ) ஷேக் அப்துல்லா (25) என்பவருக்கும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று குடும்பத்துடன் வசித்து வந்ததனா்.
இந்நிலையில் இந்த தம்பதியருக்கு இது வரை குழந்தையில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை தெளபிகா தனது தாய் வீட்டிற்கு வந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சமயலறையில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து உயிருக்கு போராடிய நிலையில் சம்பவ இடத்திலேயே தெளபிகா உடல் கருகி பலியானாா்.தகவல் அறிந்து வந்த எஸ்.பி.பட்டிணம் போலீசாா் தீக்குளித்து உயிரிழந்த இளம்பெண் தெளபிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தெளபிகாவின் தாய் பானு(50) அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டிணம் காவல் துறை சாா்பு ஆய்வாளா் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தெளபிகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனா்..மேலும் தீக்குளித்து உயிரிழந்த இளம்பெண் தெளபிகாவிற்கு திருமணமாகி 2 வருடமே ஆவதால் ராமநாதபுரம் சாா்பு ஆட்சியா் சுகபுத்ரா விசாரணை செய்து வருகிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.