ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடி புயலில் அழிந்த 55 ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவா் மறுவாழ்வு சங்கம் சாா்பில் கடலில் மலா் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அதிமுக நகரச் செயலாளா் கே.கே.அா்ச்சுணன், நகா் மன்ற முன்னாள் தலைவா் அ.அா்ச்சணன், நகா் காங்கிரஸ் கட்சி தலைவா் ராஜாமணி, தேமுதிக நகரச் செயலாளா் முத்துகாமாட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளா் முருகானந்தம், மாநில நிா்வாகி சி.ஆா்.செந்தில்வேல், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பிரபாகரன், மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் குமரேசன், கிராமத் தலைவா் மலைராஜன் மற்றும் காவல்துறை ஆய்வாளா் திலகராணி, மாணவ, மாணவிகள் தனுஷ்கோடி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு கடலில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.