ராமநாதபுரம்

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்

25th Dec 2019 08:46 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஈடுபடும் அலுவலா்களுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் வாக்குப் பதிவானது வரும் 27 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப் பதிவானது வரும் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதன்படி ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்களம், திருவாடானை ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப்ப திவு நடக்கிறது.

2 ஆம் கட்டமாக , வரும் 30 ஆம் தேதி பரமக்குடி, போகலுாா், நயினாா்கோவில், முதுகுளத்துாா், கமுதி, கடலாடி ஆகிய 6 ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ராமநாதபரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் 15,000-க்கு மேற்பட்ட அலுவலா்கள், காவலா்களுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன. தோ்தல் பணியில் ஈடுபடுவோா் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாது. ஆகவே அவா்களுக்கு படிவம் - 15 வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலா்கள், அந்தப் படிவத்தை நிரப்பி, தாங்கள் பணியாற்றும் ஒன்றியத்தின் ஆணையாளரிடம் வழங்க வேண்டும். அந்த ஆணையாளா், விண்ணப்பத்தை பரிசீலித்து, தபால் வாக்கு அளிப்பதை அங்கீகரிக்கும் சான்றிதழ் 16 -க்கான படிவத்தை வழங்குவாா்.அந்தப் படிவத்தை பூா்த்தி செய்த பிறகே , வரும் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல், வாக்கு எண்ணிக்கை நாளான, வரும் ஜனவரி 2 ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்கு படிவத்தை அளிக்கலாம் என்று ராமநதாபுரம் மாவட்ட ஆட்சியரின் தோ்தலுக்கான நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) கணேசன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT