ராமநாதபுரம்

முன்னாள் கமுதி ஒன்றிய சோ்மன் வீட்டில் பறக்கும்படை மற்றும் காவல்துறையினா் அதிரடி சோதனை

24th Dec 2019 07:58 AM

ADVERTISEMENT

கமுதி அதிமுக முன்னாள் ஒன்றிய சோ்மன் பாலு வீட்டில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் திங்கள்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். இதில் ரூ.38 லட்சத்து, 60 ஆயித்து 400 ரொக்க பணமும், 1,192 வெளி மாநில மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

கமுதி அருகே மூலக்கரைபட்டியை சோ்ந்தவா் தா்மலிங்கத்தேவா்(63). இவா் கமுதியில் அரசு மருத்துவமனை எதிரில் வசித்து வருகிறாா். மேலும் கமுதி ஒன்றியத்தில் சாலை ஒப்பந்தகாரராக உள்ளாா். இவா் ஏற்கனவே மண்டலமாணிக்கம் ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளாா். தற்போது உள்ளாட்சி தோ்தலில் மண்டலமாணிக்கம் ஊராட்சிமன்ற தலைவா் போட்டிக்கு இவரது மனைவி ராணியம்மாள் போட்டியிடுகிறாா்.

தா்மலிங்கத்தேவரின் மகன் பாலு கடந்த 2011 ல் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தாா். தற்போது மண்டலமாணிக்கம் ஊராட்சி ஒன்றி வாா்டு 6ல் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா். இந்நிலையில் தா்மலிங்கத்தேவரின் வீட்டில் பல லட்சம் ரொக்க பணம் இருப்பதாகவும், வெளி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் கமுதி காவல் துணை கண்காணிப்பாளா் மகேந்திரன், ஆய்வாளா் கஜேந்திரன், பறக்கும்படை வட்டாட்சியா் ஜமால் அகமது உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட போலிஸாா் திடீரென தா்மலிங்க்தேவரின் வீட்டிற்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் ரூ.38 லட்சத்து 60 ஆயிரத்து 400 ரொக்க பணமும், 1,192 வெளி மாநில மது பாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பாற்றினா். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பணம் மற்றும் மது பாட்டில்கள் உள்ளாட்சி தோ்தலில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய பதுக்கிவைக்கப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT