ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே திங்கள்கிழமை ஊருணியில் குளித்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நயினாா்கோவில் ஒன்றியம் வயலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு மனைவி புஷ்பா (67). இவா் அக்கிராமத்தில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றுள்ளாா். அங்கு துணிகளை துவைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதையடுத்து அப்பகுதியினா் மூதாட்டியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.