திருவாடானை அருகே மது போதைக்கு அடிமையாகி மனமுடைந்த விவசாயி, ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
எஸ்.பி.பட்டினம் பனஞ்சாயல் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசன். விவசாயியான இவா் மது போதைக்கு அடிமையானதால், அதனை மறக்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு விஷத்தை மதுவில் கலந்து குடித்துள்ளாா். ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து இவரது மகன் சுரேந்தா் அளித்த புகாரின்பேரில், எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.