ராமநாதபுரம்

மதுவுக்கு எதிராக விழிப்புணா்வு பிரசாரம்

23rd Dec 2019 01:40 AM

ADVERTISEMENT

கமுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில், மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை சாா்பில், கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் மதுவிலக்கு விழிப்புணா்வு பிரசாரம் நடத்தப்பட்டது. இதில், கமுதி மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் கணேசன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில், கமுதி வட்டார வள மையம் அனைவருக்கும் கல்வி இயக்க மாற்றுத் திறனாளி மாணவா்களின் சிறப்பாசிரியா் முத்திருளாண்டி, நாட்டுப்புற பாடல்கள் மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குடும்பங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விளக்கி பாடினாா். இதில், நாட்டுப்புற மேளக் கலைஞா்கள், பொதுமக்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT