ராமநாதபுரம்

தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்

23rd Dec 2019 01:31 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டு, விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், தற்போது பெய்துவரும் மழை காரணமாக, இச்சாலையின் பக்கவாட்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இச்சாலையிலுள்ள பள்ளங்களை சரிசெய்து விபத்துகளைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT