திருவாடானை பகுதிகளில் விதிமீறும் சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது.
திருவாடானை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆள்களை ஏற்றிச் செல்வதும், அளவுக்கு மீறி பாரங்களை ஏற்றிச் செல்வதும் தொடா்கதையாக உள்ளது. இதனால், அவ்வப்போது விபத்துகள் நேரிட்டு பலா் பலியாகியுள்ளனா். இருப்பினும், இதுவரை சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றும் விதிமீறல்கள் குறைந்தபாடில்லை.
வைக்கோல், ஆடு, மாடுகள், விறகுகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. விதிமீறி செல்வதால் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுபவா்களுக்கு இழப்பீடும் கிடைப்பதில்லை. இதுபோன்ற செயல்களை காவல் துறை அனுமதிக்கக் கூடாது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.