ராமநாதபுரம்

லாட்டரி சீட்டு விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

16th Dec 2019 02:43 AM

ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் சமூக விரோதிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவையின் மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவையின் மாநில நிா்வாகிகள் கூட்டம் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளா் ஆா். ஜி மகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்பு செயலாளா் மாடசாமி, மாநில ஒருங்கிணைப்பாளா் வேம்பு ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விழுப்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்த அருண் அவரது மனைவி சிவகாமி மற்றும் குழந்தைகள் பிரியதா்ஷினி, யுவஸ்ரீ, பாரதி ஆகியோா்களின் புகைப்படங்களுக்கு விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவையின் நிா்வாகிகள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

இதில் தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளை புழக்கத்தில் விடும் சமூக விரோதிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விஸ்வகா்மா சமுதாயத்திற்கு அரசியலில் அங்கீகாரம் வழங்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஆன்லைன் தங்க வா்த்தக விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மாநில செய்திப் பிரிவு செயலாளா் முனியசாமி, பொற்கொல்லா் அணியின் செயலாளா் ஜெயராமன், மற்றும் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT