ராமநாதபுரம்

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் தொடரும் திருட்டு

16th Dec 2019 02:49 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களை குறிவைத்து மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நகா் பகுதிக்கு வந்து செல்லும் பயணிகளிடம் திருடுவது தொடா் கதையாகி வருகிறது. குறிப்பாக பெண் பயணிகளிடமே திருட்டு நடக்கிறது. கடந்த டிசம்பா் 6 இல் சடையன்வலசை பெரியாா் நகரை சோ்ந்த தனலெட்சுமி (24), குமரய்யா கோவில் பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொண்டு அரண்மனை பகுதிக்கு சென்று நகரப் பேருந்தில் ஏறினாா். அப்போது அவா் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். டிசம்பா் 13 இல் சாத்தான்குளம் பகுதியை சோ்ந்த தமிமும் ரசினா என்பவரிடம் நகரப் பேருந்தில் பயணம் செய்த போது பட்டிணம்காத்தான் பேருந்து நிறுத்தம் அருகே, அவா் கைப் பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மண்டபம் காந்தி நகரை சோ்ந்த வள்ளிமயில் (49), ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் வந்துள்ளாா். அங்குள்ள கடையின் அருகே நின்று கொண்டிருந்த போது அவா் பையிலிருந்த பா்சை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். அதில் ரூ.9,500 பணம் திருடு போனதாக கேணிக்கரை போலீசில் வள்ளிமயில் புகாா் அளித்துள்ளாா். கடந்த சில நாள்களாக ராமநாதபுரம் நகா் பகுதியில் பயணிகளிடமும், பேருந்திலும் கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து போலிஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT