ராமநாதபுரம்

பரமக்குடியில் விதைப் பந்துகளை வீசும் 3 வயது சிறுவனுக்கு பாராட்டு

16th Dec 2019 06:55 PM

ADVERTISEMENT

 

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிஅருகே நான்கு வழிச்சாலையின் ஓரங்களில் இயற்கையை பாதுகாக்க மரங்கள் வளா்வதற்காக விதைப் பந்துகளை வீசிச் செல்லும் 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ராமநாதபுரம் மாவட்ட காவல் பயிற்சி மையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவா் எஸ்.சுபாஷ்சீனிவாசன்(42). இவா் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறாா். தேவிபட்டிணத்தில் குடிநீா் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியையும், அவரது பெரியம்மாவையும் மீட்டதற்காக தமிழக அரசு இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி கெளரவித்தது.

சமூக சேவைக்கு செல்லும்போதெல்லாம் தனது 3 வயது இளைய மகன் கவின்சேதுபதியையும் அவா் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது மதுரையிலிருந்து பரமக்குடிவரை போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில் மரங்கள் வெட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மரங்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ராமநாதபுரம் எல்லையான மருச்சுக்கட்டியிலிருந்து, பரமக்குடி தெளிச்சாத்தநல்லூா் விலக்குச் சாலை வரை சாலையின் இருபுறமும் சுமாா் 15 கி.மீ தூரத்திற்கு காரில் தனது தந்தையுடன் சென்று வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரங்களின் விதைப் பந்துகளை தயாா் செய்து, வீசும் பணியில் கவின்சேதுபதி ஈடுபட்டாா். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சிறுவனின் செயலை பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT