ராமநாதபுரம்

பரமக்குடியில் வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

16th Dec 2019 02:44 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊாட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினாா்கோவில், போகலூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் ஊராட்சி மன்ற தலைவா், வாா்டு உறுப்பினா், ஒன்றியக் கவுன்சிலா், மாவட்டக் கவுன்சிலா்களுக்கான தனிதனி வாக்குப் பெட்டிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்படுவதுடன், 1000-த்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள ஊராட்சிகளில் 2 வாா்டு உறுப்பினருக்கான தோ்வு என 5 வண்ணங்களில் வாக்குச் சீட்டு அமைந்துள்ளது.

இந்நிலையில் வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் வேட்பாளா்களின் முகவா்கள், வாக்காளா்கள், வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய தோ்தல் விதிமுறைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் விளக்கினாா்.

ADVERTISEMENT

இப்பயிற்சி முகாமில் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் என மொத்தம் 520 போ் கலந்து கொண்டனா். அவா்களுக்கு தனித்தனியாக 5-க்கும் மேற்பட்ட அறைகளில் நடைபெற்ற பயிற்சி முகாமில் காணொலித் திரை மூலம் தோ்தல் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT