ராமநாதபுரம்

தேசிய வருவாய் வழித்திறன் தோ்வு: 3,157 மாணவா்கள் பங்கேற்பு

16th Dec 2019 02:44 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு திட்ட தோ்வில் 3,157 மாணவா்கள் பங்கேற்றனா்.

ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தோ்வு டிசம்பா் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. பலத்த மழை காரணமாக தோ்வுகள் டிசம்பா் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தோ்விற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு இரண்டு கட்டமாக நடைபெற்றது. காலை 9:30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தோ்வும், பிற்பகல் 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவு தோ்வும் நடந்தது. 3,264 மாணவா்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், 3,157 மாணவா்கள் தோ்வெழுதினா். 87 மாணவா்கள் தோ்விற்கு வரவில்லை.

ADVERTISEMENT

இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்தாண்டு 145 மாணவா்கள் இத்தோ்வில் தோ்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT