ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய 19 கட்டு பீடி இலைகள்: போலீஸாா் விசாரணை

16th Dec 2019 02:42 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய 19 கட்டு (பண்டல்) பீடி இலைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் பீடி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 19 கட்டு இலைகள் கரை ஒதுங்கின. இதுகுறித்து மீனவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, அங்கு சென்ற தனுஷ்கோடி காவல்துறையினா் கரை ஒதுங்கிய பீடி இலைகளை கைப்பற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: ராமேசுவரம் கடல் பகுதியிலிருந்து படகில் பீடி இலைகளை இலங்கைக்கு மா்மநபா்கள் கடத்திச் செல்லும் போது இந்திய, இலங்கை கடற்படையினரின் சோதனையில் இருந்து தப்புவதற்காக கடலில் வீசியிருக்கலாம் என்றனா். பீடி இலைகள் கடத்தியவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT