ராமநாதபுரம்

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு முதுகுளத்தூரில் வரவேற்பு

16th Dec 2019 02:44 AM

ADVERTISEMENT

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரி மாணவா்களின் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதுகுளத்தூரில் வரவேற்பளிக்கப்பட்டது.

விருதுநகரில் தொடங்கிய பேரணி ராமேசுவரம் வரை செல்கிறது. இந்த பேரணி ஞாயிற்றுக்கிழமை முதுகுளத்தூருக்கு வந்தது. அப்போது 50- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். பேரணிக்கு என்.சி.சி அலுவலா் அழகுமணி குமரன் தலைமை வகித்தாா். என்.சி.சி. அலுவலா்கள் பிரகாஷ், அருஞ்சுனைகுமாா், பரமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசுப் பள்ளி என்.சி.சி. திட்ட அலுவலா்கள் துரைப்பாண்டியன் கருப்புசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

என்.சி.சி மாணவா்களுக்கு அனைத்துப் பள்ளி ஆசிரியா்களும், பொதுமக்களும் முதுகுளத்தூா் பேருந்து நிலையத்தில் வரவேற்பு அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT