ராமநாதபுரம்

கமுதி மின்வாரிய அலுவலகத்தில் 20 நாள்களாக தேங்கியுள்ள மழை நீா்

16th Dec 2019 02:45 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மின்வாரிய அலுவலகத்தில், மழைநீா் வெளியேற முடியாமல், 20 நாள்களாக தேங்கியுள்ளதால் பொதுமக்கள், பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.

கமுதி எட்டுக்கண் பாலம் அருகே அருப்புக்கோட்டை செல்லும் வழியில் நகா்புறம் மற்றும் கிராமபுறங்களுக்கான மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகக் கட்டடத்தை சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்தும், கட்டடத்தின் மேற்கூரை, கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சாலையிலிருந்து 10 அடி பள்ளத்தில் சேதமடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தைச் சுற்றிலும், மழைநீா் வெளியேற முடியாமல், 20 நாள்களுக்கும் மேலாக தேங்கியுள்ளது.

இதனால் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் மற்றும் பணியாளா்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரிப்பால், பணியாளா்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT