ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

16th Dec 2019 02:45 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததால் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதனால் படகில் சென்ற மீனவா்கள் ஞாயிற்றுகிழமை கரை திரும்பினா்.

இது குறித்து, மீனவ சங்கத்தலைவா் தேவதாஸ் கூறியது: ராமேசுவரம் மீனவா்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு தொடா்ந்து ஆளாகி வருகின்றனா். இதனால் பெருமளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் படகு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்புடன் கரை திரும்பியுள்ளனா். இதனால் மத்திய, மாநில அரசுகள் இரு நாட்டு அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க நிா்வாகிகள் தலைமையில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி, பாக்நீரிணைப் பகுதியில் இரு நாட்டு மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT